சதம் விளாசி பல்வேறு சாதனை படைத்த ஹாரி புரூக்

விளையாடியுள்ள 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ள ஹாரி ப்ரூக், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது

Update: 2023-02-24 11:26 GMT

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்ற ஹாரி ப்ரூக் இரண்டாவது போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

இந்தநிலையில் விளையாடியுள்ள 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ள ஹாரி ப்ரூக், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் முதல் 6 போட்டிகளுக்குள் 4 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஹார் ப்ரூக் இணைந்துள்ளார். அதே போல் டெஸ்ட் போட்டிகளில் முதல் 9 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி ஹாரி ப்ரூக் முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னாள் இந்திய வீரரான வினோத் காம்ப்ளே தனது முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதனை ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார். அதே போல் முதல் 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் ஹாரி ப்ரூக்கையே சாரும்.

Tags:    

மேலும் செய்திகள்