யாஷ் தயாளை தேற்றிய ஹர்திக் பாண்ட்யா

ஓட்டலுக்கு திரும்பியதும் ஹர்திக் பாண்ட்யா, ரஷித்கான் உள்ளிட்ட சக வீரர்கள் அவரது பக்கத்தில் அமர்ந்து ஆறுதல் கூறினர்.;

Update:2023-04-11 04:43 IST

ஆமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த யாஷ் தயாள் 4 ஓவர்களில் 69 ரன்களை வாரி வழங்கினார். இதில் அவரது கடைசி ஓவரில் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்சர் அடித்ததால் வெற்றி வாய்ப்பும் பறிபோனது.

இதனால் நொந்து போன யாஷ் தயாள் சோகத்தில் மூழ்கினார். ஓட்டலுக்கு திரும்பியதும் ஹர்திக் பாண்ட்யா, ரஷித்கான் உள்ளிட்ட சக வீரர்கள் அவரது பக்கத்தில் அமர்ந்து ஆறுதல் கூறினர். அவரது மனநிலையை மாற்ற சில வீரர்கள் ஜாலியாக பாடலுக்கு நடனமும் ஆடினர்.

இன்னொரு பக்கம் கவலையில் அவரது தாயார் ராதா தயாள் சாப்பிடவில்லையாம். இந்த தகவலை தெரிவித்த அவரது தந்தை சந்திரபால், விளையாட்டில் இந்த மாதிரி நடப்பது சகஜம். மொத்தத்தில் முந்தைய நாள் எங்களுக்கு வெறுக்கத்தக்க மோசமான ஒரு நாளாக அமைந்து விட்டது என்று கூறினார் 

Tags:    

மேலும் செய்திகள்