உலகக்கோப்பைக்கான அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது மகிழ்ச்சி: நடராஜன் சொல்கிறார்

இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் பெரும் வருத்தமாக உள்ளதாக நடராஜன் தெரிவித்தார்.

Update: 2023-09-11 19:25 GMT

சேலம்,

சேலம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தனியார் விழாவில் கலந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தாண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும். விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்