நாளை நடக்கிறது, டி.என்.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம்

டி.என்.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளை நடைபெற உள்ளது.;

Update: 2023-02-22 16:55 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ளூர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக ஐபிஎல் போன்றே, டிஎன்பிஎல் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சர்வதேச வீரர்களும், உள்ளூர் வீரர்களும் இணைந்து ஆடும் இப்போட்டி, தமிழகத்தில் பிரபலமானது. வரும் ஆண்டிற்கான டிஎன்பிஎல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு குறித்த ஏலம் பற்றி, டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் வரும் நாளை மற்றும் நாளை மறுநாள் விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா சூப்பர் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை என 8 அணிகள் களத்தில் உள்ளன.

மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து.

மேலும் ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ பிரிவு வீரருக்கு ரூ. 10 லட்சம், பி பிரிவு வீரருக்கு ரூ. 6 லட்சம், சி பிரிவு வீரருக்கு ரூ. 3 லட்சம் மற்றும் டி பிரிவு வீரருக்கு ரூ. 1.50 லட்சம் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏ பிரிவு வீரர்- சர்வதேச போட்டிகளில் ஆடியவர், பி பிரிவு வீரர்- பிசிசிஐ உள்நாட்டுப் போட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள், சி பிரிவு வீரர்- ஏ மற்றும் பி பிரிவில் இடம்பெறாத மற்றும் குறைந்தது 30 டிஎன்பில் போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர், டி பிரிவு வீரர்- மற்ற வீரர்கள்.

தக்கவைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 30ஆம் தேதியன்று முடிந்தது. இதில் ஒவ்வொரு அணியினாலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

1.) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஜெகதீசன் (பிரிவு பி),சசிதேவ் (பிரிவு சி) - ரூ.61 லட்சம்

2.) நெல்லை ராயல் கிங்ஸ் - அஜிட்ஸ் (பிரிவு பி), கார்த்திக் மணிகண்டன் (பிரிவு டி) - ரூ.62.50 லட்சம்

3.) ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் - துஷார் ரஹீஜா (பிரிவு டி) - ரூ.68.50 லட்சம்

4.) லைகா சூப்பர் கிங்ஸ் - ஷாரூக்கான் (பிரிவு பி), சுரேஷ் குமார் (பிரிவு டி) - ரூ.62.50 லட்சம்

5.) திண்டுக்கல் டிராகன்ஸ் - ரவிச்சந்திரன் அஷ்வின் (பிரிவு ஏ) - ரூ.60 லட்சம்

6.) ரூபி திருச்சி வாரியர்ஸ் - ஆண்டனி தாஸ் (பிரிவு பி) - ரூ.ரூ.64 லட்சம்

7.) சேலம் ஸ்பார்டன்ஸ் - கணேஷ் மூர்த்தி (பிரிவு சி) - ரூ.67 லட்சம் 8.) மதுரை பேந்தர்ஸ் - கவுதம் (பிரிவு டி) - ரூ.68.50 லட்சம்

Tags:    

மேலும் செய்திகள்