இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் இந்த வீரர் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பார் - கவாஸ்கர்

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-01-22 08:26 GMT

image courtesy; PTI

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் இந்திய டெஸ்ட் அணியில் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் நிலையான இடத்தை பிடிப்பார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது. "சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஜெய்ஸ்வால் மிகவும் எளிதாக செட்டிலாக கூடியவர். மேலும் அவர் இடது கை பேட்ஸ்மேன். அதை பயன்படுத்தி சிறப்பாக விளையாடி இந்த தொடருக்கு பின் அவர் இந்திய டெஸ்ட் அணியில் தன்னை முழுமையாக நிலை நிறுத்துவார் என்று நம்புகிறேன்.

அதேபோல இந்திய மைதானங்களில் நடைபெற்ற உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக பேட்டிங் செய்தார். எனவே அதேபோல இந்த தொடரிலும் அவர் 5-வது இடத்தில் அதிரடியாக விளையாடுவார் என்று நம்புகிறேன். குறிப்பாக பிட்ச் எப்படி இருக்கும் என்பதை புரிந்து அவர் அதிரடியாக விளையாடுவதை பார்ப்பது ஆவலாக இருக்கும். அவர் அதை மீண்டும் செய்வார் என்று நம்புகிறேன்" இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்