முதல் டெஸ்ட்; கம்மின்ஸ், ஹேசில்வுட் அபார பந்துவீச்சு..முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களில் ஆல் அவுட்

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Update: 2024-01-17 06:14 GMT

Image Courtesy: @ICC

அடிலெய்டு,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில்  விளையாடுகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிராத்வெயிட் 13 ரன், சந்தர்பால் 6 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து களம் இறங்கிய மெக்கன்சி ஒருமுனையில் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அலிக் அத்தானாஸ் 13 ரன், கவம் கோட்ச் 12 ரன், ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 ரன், டி சில்வா 6 ரன், அல்சாரி ஜோசப் 14 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மெக்கன்சி அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்