முதல் டி20 ; ரச்சின் ரவீந்திரா அதிரடி - ஆஸ்திரேலியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.;

Update:2024-02-21 13:35 IST

image courtesy; twitter/@ICC

வெலிங்டன்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

இதன்படி நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலன் மற்றும் கான்வே களமிறங்கினர். இதில் பின் ஆலன் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வெறும் 29 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அசத்திய அவர், ஆடம் ஜாம்பாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர் உட்பட 24 ரன்கள் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கான்வேவும் அரைசதம் அடித்தார்.

அதிரடியாக விளையாடிய ரச்சின் 68 ரன்களிலும், கான்வே 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிளென் பிலிப்ஸ் 19 ரன்களுடனும், மார்க் சாப்மேன் 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்