முதல் ஒருநாள் போட்டி: அயர்லாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்கா 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2024-10-03 08:59 GMT

அபுதாபி,

அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் மற்றும் டோனி டி ஜோர்ஜி களம் இறங்கினர். இதில் டோனி டி ஜோர்ஜி 12 ரன்னிலும், அடுத்து வந்த பவுமா 4 ரன்னிலும், வான் டென் டுசென் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ரிக்கல்டனுடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார்.நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ரியான் ரிக்கல்டன் 91 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 79 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரியான் ரிக்கல்டன் 91 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 79 ரன் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் மார்க் அடெய்ர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில் திணறியது. அயர்லாந்து 31.5 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசாட் வில்லியம்ஸ் 4 விக்கெட்டும், நிகிடி, பார்டுயின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இரு அணிகள் மோதும் 2-வது போட்டி நாளை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்