'பாகிஸ்தான் பவுலர்களை சமாளிக்க அனுபவம் கைகொடுக்கும்' - ரோகித் சர்மா

பாகிஸ்தான் பவுலர்கள் எந்த மாதிரி, எப்படி பந்து வீசுவார்கள் என்பது ஓரளவு தெரியும் என்று ரோகித் சர்மா கூறினார்.

Update: 2023-09-01 23:25 GMT

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், 'எங்களது வலை பயிற்சியில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் எல்லாம் கிடையாது. எங்களிடம் எந்த பவுலர்கள் இருக்கிறார்களோ அவர்கள் மூலம் வலை பயிற்சியில் ஈடுபடுகிறோம். அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் தரமான பந்து வீச்சாளர்கள் என்பதில் சந்தேகமில்லை.

மூன்று பேரும் அபாரமாக பந்து வீசுகிறார்கள். அதே நேரத்தில் நாங்களும் பல ஆண்டுகளாக நன்றாக விளையாடி வருகிறோம். எனவே அவர்கள் எந்த மாதிரி, எப்படி பந்து வீசுவார்கள் என்பது ஓரளவு தெரியும். அவர்களை எதிர்கொள்ள எங்களது அனுபவத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது சில வீரர்களின் உடல்தகுதியை சோதிப்பதற்கான போட்டி அல்ல. உடல்தகுதி சோதனை பெங்களூருவில் நடந்து முடிந்து விட்டது. இது 6 ஆசிய அணிகள் இடையிலான தொடர். எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய போட்டி. ஒரு அணியாக என்ன சாதிக்கப்போகிறோம் என்பதை பார்க்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்