கர்நாடக ஜூனியர் அணிக்கு டிராவிட்டின் மகன் கேப்டன்
தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட்டில் கர்நாடக அணியை அன்வே வழிநடத்த உள்ளார்.
பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை பின்பற்றி அவரது மகன்கள் சமித், அன்வே இருவரும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.
இந்த நிலையில் அவரது இளைய மகன் அன்வே 14 வயதுக்குட்பட்டோருக்கான கர்நாடக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அன்வே பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார்.
கேரளாவில் வருகிற 23-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை நடக்கும் தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட்டில் கர்நாடக அணியை அன்வே வழிநடத்த உள்ளார். டிராவிட்டின் மூத்த மகன் சமித் இதே 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் விளையாடி இரு இரட்டை சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.