4 ஆண்டுகால ஐ.சி.சி. போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஜீ நிறுவனத்துடன் பகிர்ந்தது டிஸ்னி ஸ்டார்

இணையவழி ஒளிபரப்பான டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தன்னிடம் வைத்துள்ளது.

Update: 2022-08-30 20:29 GMT

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு இறுதிவரை நடைபெறும் அனைத்து வகையான ஆண்கள் மற்றும் பெண்கள் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக அந்த நிறுவனம் ஏறக்குறைய ரூ.24 கோடி ஆயிரம் வழங்க வேண்டி வரும்.

இந்த நிலையில் நிதி சுமையை கருத்தில் கொண்டு இவற்றின் ஒளிபரப்பு உரிமத்தை ஜீ குழுமத்துடன் டிஸ்னி ஸ்டார், ஐ.சி.சி. ஒப்புதலோடு பகிர்ந்துள்ளது. அதாவது இந்த 4 ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆண்கள் உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டிகளை இந்தியாவில் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமம் ஜீ-க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கான இணையவழி ஒளிபரப்பான டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தன்னிடம் வைத்துள்ளது. மேலும் பெண்கள் உலக கோப்பை போட்டிக்கான டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமத்தையும் டிஸ்னி ஸ்டார் தன்னகத்தே கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்