தோனியின் எச்சரிக்கை.. மீறாத பவுலர்கள்... சென்னை அணியில் நடந்த அதிரடி மாற்றம்..!

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் ஒரு நோ-பால் கூட வீசவில்லை. .

Update: 2023-04-09 12:24 GMT

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட், சான்ட்னர், துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 18. 2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் ஒரு நோ-பால் கூட வீசவில்லை. .

சென்னையில் நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான போட்டியில் சென்னை பந்து வீச்சாளர்கள் அதிக 'எக்ஸ்ட்ரா' ரன்களை வாரிக்கொடுத்தனர். 3 நோபால்கள், 2 லெக்பைஸ், 13 வையிட் என மொத்தம் 18 ரன்களை எக்ஸ்ட்ராவாக சென்னை பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கினர்.

போட்டிக்கு பின் பேசிய சென்னை கேப்டன் டோனி, பந்துவீச்சாளர்கள் ஒரு நோபாலும் வீசக்கூடாது, குறைவான ஒயிட்களையே வீச வேண்டும்.. அவ்வாறு நிறுத்தாவிட்டால் வீரர்கள் வெறொரு கேப்டன் தலைமையில் தான் விளையாட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், நேற்றையப் போட்டியில் ஒரு நோ-பால் கூட வீசாத சென்னை பவுலர்கள், வைடு மூலம் 5 ரன்களை மட்டுமே வழங்கி இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்