தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது..!
தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மும்பை,
ஐபிஎல் தொடரின் முதல் கட்ட போட்டிகளின் போதே சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயத்திற்கு முதற்கட்ட சிகிச்சைகளைஎடுத்துக் கொண்ட தோனி, காயத்துடனே தொடர்ந்து விளையாடி வந்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை வென்றது. இதனை தொடர்ந்து இன்று தோனிக்கு மும்பை தனியார் மருத்துவமனையில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவர் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது