பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி பந்து வீச்சு தேர்வு
பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு செய்தது.
பெங்களூரு,
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன.
முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்:
பெங்களூரு:- விராட் கோலி, டு பிளஸ்சிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வெயின் பார்னெல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷக்.
டெல்லி:- டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், அமன் ஹகிம் கான், லலித் யாதவ், அபிஷேக் போரொல், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்டியா, முஸ்தாபிஜூர் ரகுமான்