பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் பந்துவீசக்கூடும் - கேப்டன் பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் நாளை சிட்னி மைதானத்தில் தொடங்க உள்ளது.

Update: 2024-01-02 06:25 GMT

Image : AFP 

சிட்னி,

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (வயது 37). இவர் 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 932 ரன்கள் குவித்துள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 695 ரன்கள் குவித்து இருக்கிறார். மேலும், 99 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 894 ரன்கள் அடித்துள்ளார். இதனிடையே, ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் நாளை சிட்னி மைதானத்தில் தொடங்க உள்ளது. இப்போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் டேவிட் வார்னர் இந்த டெஸ்ட் போட்டியில் பந்துவீசலாம் என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ,

சிட்னி டெஸ்டில் சதம் அடிப்பதே வார்னர் தனது டெஸ்ட் வாழ்க்கையை முடிக்க சிறந்த வழியாகும். ஆனாலும் போட்டியில் பந்துவீசி கடைசி விக்கெட்டை எடுத்தாலும் நன்றாக இருக்கும் நான் அதுபற்றி தற்போதுதான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்