கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து..! 237 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

Update: 2023-07-07 14:52 GMT

ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்களுக்கு 3 விக்கெட்ட இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பென் ஸ்டோக்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரை சதம் விளாசினார். 9 விக்கெட்டுகளை இழந்ததால் அதிரடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்