போட்டி ஒன்று...சாதனைகள் பல.. ரோகித் சர்மா அசத்தல்

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் பல சாதனைகள் படைத்து அசத்தியுள்ளார்.

Update: 2024-06-06 11:49 GMT

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ், அக்சர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா வெறும் 12.2 ஓவர்களிலேயே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 52 ரன்களும், பண்ட் 36 ரன்களும் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா பல சாதனைகள் படைத்து அசத்தியுள்ளார். அவை விவரம் பின்வருமாறு;-

1. இந்திய கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை (152 ஆட்டம்) கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஏற்கனவே விராட் கோலி (4,038 ரன்), பாபர் அசாம் (4,023 ரன்) ஆகியோர் 4 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார்கள்.

2.ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் நொறுக்கிய 3 சிக்சர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்சர் (473 ஆட்டம்) அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார். அவருக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்களுடன் உள்ளார்.

3. அரைசதம் அடித்த ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஆயிரம் ரன்களை (40 ஆட்டத்தில் 1,015 ரன்) கடந்துள்ளார். இலங்கையின் ஜெயவர்த்தனே, இந்தியாவின் விராட் கோலிக்கு பிறகு இந்த சாதனையை படைத்த 3-வது வீரர் ரோகித் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்