சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது.;

Update: 2023-03-02 19:20 GMT

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வருகிற 31-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முகாமில் பங்கேற்க நேற்றிரவு சென்னை வந்த கேப்டன் டோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர்தூவி உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, சுப்ரன்ஷூ சேனாபதி உள்ளிட்ட வீரர்களும் சென்னை வந்து சேர்ந்தனர். பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும், முகாம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்