பெங்களூரு-குஜாராத் போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
மழை காரணமாக பெங்களூரு-குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடரின் கடைசி லீக் போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பெங்களூரு ஆட உள்ளது.
இந்த சூழலில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மழை தனது ஆட்டத்தை காட்டி வருகிறது. இதன் காரணமாக பெங்களூரு-குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால் பெங்களூரு ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். பெங்களூரு அணி வீரர்களும் இதே நிலையில் தான் உள்ளனர்.
ஏற்கெனவே ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கிடையே நான்காவது இடத்தை பிடிப்பதில் போட்டி நிலவுகிறது. அணிகளின் வெற்றி, தோல்வி, ரன்ரேட் என ஒவ்வொன்றும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இப்படியிருக்க, மழையால், ஆட்டம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
ஒருவேளை மழை இடைவிடாது பெய்து, போட்டி நடைபெறாமல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டால், ராஜஸ்தான் அணி வெளியேறும் நிலை உருவாகும். ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் போட்டியில் மும்பை வெற்றி பெற்றால், மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை மும்பை தோல்வியடைந்தால், 1 புள்ளி முன்னிலை பெற்று பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.