இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை: ரோகித், கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்?

20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ அறிவித்தது. தற்போது யார் யாருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது.

Update: 2024-07-08 07:39 GMT

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பின்னர்   டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது. பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.

பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடியில் யார் யாருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது.  இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதன்படி, கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோருக்கும் இதே பரிசுத்தொகைதான் கிடைக்கும்.

அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்