ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-15 07:17 GMT

image courtesy: AFP

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆகிய தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 11 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய டி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய டி20 அணி விவரம் பின்வருமாறு:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.

இந்த டி20 அணியே 2 தொடர்களிலும் விளையாட உள்ளது.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:-

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஸ்டிவ் சுமித், ஆடம் ஜம்பா

Tags:    

மேலும் செய்திகள்