உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா...!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை டிரா செய்ய இந்தியா போராடி வருகிறது.;
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்நிலையில், இறுதி நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின.
கோலி 49 ரன்களுடனும், ஜடேஜா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்ற ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷர்துல் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்.
தற்போதைய நிலவரப்படி இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. பரத் 22 ரன்களுடனும், உமேஷ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 226 ரன்கள் தேவை. அதேவேளை, இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும்.
இன்று ஒரு நாள் ஆட்டம் கைவசம் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.