ஆஷிஷ் நெஹ்ராவிடம் வேலை கேட்டேன்... ஆனால் அவர்... - யுவராஜ் சிங் பரபரப்பு பேச்சு

2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் இடம்பெற்றிருந்தார்.

Update: 2024-01-14 15:19 GMT

சண்டிகர்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 132 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 ஆயிரத்து 750 ரன்களும் குவித்துள்ளார். 2019ம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், யுவராஜ் சிங் பிடிஐ செய்தி முகமைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியில் பணியாற்ற அந்த அணியின் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான ஆஷிஷ் நெஹ்ராவிடம் வேலை கேட்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக யுவராஜ் சிங் கூறியதாவது:-

எனக்கு இனி என்ன வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை பார்க்க வேண்டும். ஆனால், தற்போது என் குழந்தைகள்தான் எனக்கு முக்கியம். என் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல தொடங்கியபின் எனக்கு நிறைய நேரம் இருக்கு. அப்போது, நான் பயிற்சியை மேற்கொள்ள முடியும். நான் இளம் வீரர்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன். குறிப்பாக என் மாநில இளம் வீரர்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன். அணியின் ஆலோசகராக இருக்க எனக்கு விருப்பம் உள்ளது. ஐபிஎல் அணியில் இடம்பெற விருப்பம் உள்ளது. அதற்காக நான் காத்திருக்கிறேன்.

ஆஷிஷ் நெஹ்ராவிடம் (குஜராத் அணியின் பயிற்சியாளர்) நான் வேலை கேட்டேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். எனக்கு எந்த ஐபிஎல் அணியில் ஆலோசகராக இருக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று பார்க்கலாம். ஆனால், இப்போதைக்கு நான் நிலையாக இருக்கவேண்டும். வரும் ஆண்டுகளில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு சென்று இளம் வீரர்கள் வளர்ச்சியடைய முடிந்தவரை என் பங்களிப்பை அளிக்க விரும்புறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்