பயம் காட்டிய அஸ்வின்: உஷாராக விக்கெட்டை காப்பற்றிய தவான் - பட்லரை போகஸ் செய்த கேமிராமேன்...! வீடியோ
தற்போது பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் தான் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.;
கவுகாத்தி,
ஐபிஎல் 2023 சீசனில் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 197 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வெற்றிக்கு அருகில் சென்ற எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.
முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் விளையாடியபோது ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். அவர் 7-வது ஓவரை வீசியபோது
பிரப்சிம்ரன் சிங் எதிர்கொண்டார். அப்போது மறுமுனையில் ஷிகர் தவான் பந்துவீசுவதற்கு முன்பாக கிரீஸை விட்டு வெளியேறி வந்தார். இதனை கவனித்த அஸ்வின், ஷிகர் கிரீஸில் இருந்து வெளியேறிய போது பந்துவீசுவதை திடீரென நிறுத்தினார். இதனால் அஸ்வின், ஷிகர் தவானை ரன் அவுட் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதையும் செய்யாமல் மீண்டும் பந்துவீச சென்றார்.
அப்போது ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்ப, பீல்டிங் செய்துகொண்டிருந்த பட்லர் முகத்தை கேமிராமேன் போகஸ் செய்தார்.
முன்பு ஒருமுறை ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்யதது பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் தான் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.