டி20 கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட அக்சர் படேல் திறமையானவர் - பார்த்தீவ் படேல் கருத்து

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.;

Update: 2024-01-16 09:27 GMT

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்த தொடரில் ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையில் இடம் பிடிக்க போராடி வருகின்றனர். அந்த வரிசையில் ஓரளவு அனுபவமிகுந்த அக்சர் படேல் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாட போராடி வருகிறார். அதில் இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே உள்பட அனைத்து நேரங்களிலும் பந்து வீசுவதில் ஜடேஜாவை விட அக்சர் படேல் திறமையானவர் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். எனவே அக்சர் படேலுக்கு உலகக்கோப்பையில் முன்னுரிமை வழங்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "டி20 கிரிக்கெட்டில் அக்சர் படேல் நிறைய வேரியசன்களை கொண்டு வருவார். அவர் ஒரே மாதிரியாக பந்து வீச மாட்டார். எந்த இடத்திலும் பேட்டிங் செய்யக் கூடியவர்.

இந்திய அணியை நீங்கள் பார்க்கும்போது தற்போது பவர் ஹிட்டர் தேவைப்படுகிறது. அதை அக்சர் படேல் உங்களுக்கு செய்வார். என்னைப் பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட அக்சர் படேல் முன்னிலையில் இருக்கிறார். அவர் டி20 போட்டியின் எந்த இடத்திலும் அசத்தக்கூடியவர். நாம் ஜடேஜாவை பற்றி பேசுகிறோம்.

இருப்பினும் அக்சர் நமக்கு வளைவுத் தன்மையை கொடுப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் பந்து வீசும் திறமையை கொண்டிருப்பது அவரை இன்னும் சிறந்த கிரிக்கெட்டராக காட்சிப்படுத்துகிறது. துல்லியமாக பந்து வீசுவதே அவருடைய பலமாகும். அவரை நீங்கள் அடிக்க முயற்சித்தால் இறங்கி செல்ல வேண்டும் அல்லது பவர் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் வீசும் வேகத்தில் நீங்கள் அதை செய்வது கடினமாகும்" என்று பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்