இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் இந்தூருக்கு மாற்றம் - பிசிசிஐ அறிவிப்பு...!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது.;

Update: 2023-02-13 04:57 GMT

புதுடெல்லி,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு உகந்தவாறு இல்லை.

புல் இல்லாமல் திட்டுகளாக காணப்படும் அவுட் பீல்டை இன்னும் 16 நாட்களில் தயார்படுத்துவது கடினம். அத்துடன் அடுத்த சில நாட்களில் மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த போட்டியை தர்மசாலாவில் இருந்து மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு உகந்தவாறு இல்லை. எனவே இந்த போட்டி இந்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

தர்மசாலாவில் கடந்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு எந்த போட்டிகளும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

மேலும் செய்திகள்