நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 154/3
2வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
கராச்சி,
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று கராச்சியில்தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். டாம் லாதம் - கான்வே ஜோடி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர். அணியில் ஸ்கோர் 134 ரன்கள் இருந்த போது லாதம் அவுட் ஆனார். இதனையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கான்வே சதம் அடித்து அசத்தினார். அவர் 122 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே வில்லியம்சனும் அவுட் ஆனார். அடுத்து வந்த நிக்கோலஸ் 26 ரன்னிலும், மிட்செல் 3 ரன்னிலும், பிரேஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நிஷம் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது .
தொடக்கத்தில் இஷ் சோதி 11 ரன்களும் , சிறப்பாக விளையாடிய டாம் பிளெண்டல் அரைசதம் அடித்து 51 ரன்களுக்கும் , டிம் சவுதி 10 ரன்களுக்கும் வெளியேறினார் . பின்னர்கடைசி விக்கெட்டுக்கு மேட் ஹென்ரி , அஜாஸ் படேல் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். நிலைத்து ஆடிய மேத் ஹென்ரி அரைசதம் அடித்தார். தொடர்ந்து அஜாஸ் படேல் 35 ரன்களில் வெளியேறினார். இறுதியில் நியூசிலாந்து அணி 449 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. மேத் ஹென்ரி 65 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும் , நசீம் ஷா , ஆகா சல்மான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் 20 ரன்களுக்கும் , பாபர் அசாம் 24 ரன்களில் ரன் அவுட் ஆனார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் அரைசதம் அடித்தார்.
2வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 74ரன்களும் ,சவுத் ஷகீல் 13 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.