2வது டெஸ்ட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து...!

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்றிருந்தது.

Update: 2023-12-09 09:50 GMT

Image Courtesy: @ICC

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து வங்காளதேசம் வெற்றி பெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ரன்களும், தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 180 ரன்களும் எடுத்தன.

இதையடுத்து 8 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 39.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்