நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி : தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம்

இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் 60 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது;

Update: 2023-01-20 09:52 GMT

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 349 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச, ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டது.இதனால் இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் 60 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்