சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகள்... விராட் கோலியை வாழ்த்திய ஜெய்ஷா

விராட் கோலி இன்று சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16வது வருட பயணத்தை நிறைவு செய்தார்.

Update: 2024-08-18 16:51 GMT

புதுடெல்லி,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அதேபோல நிறைய வெளிநாட்டவர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.

இதனிடையே இன்று (ஆகஸ்ட் 18-ம் தேதி) சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16வது வருட பயணத்தை விராட் கோலி நிறைவு செய்தார். 

இந்நிலையில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், "16 வருடங்களுக்கு முன்பாக இன்று விராட் கோலி 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக காலடி வைத்தார். அங்கிருந்து அவர் ஒரு ஜாம்பவானுக்கு உண்டான கெரியரை துவங்கும் அடையாளத்தை உருவாக்கினார். சர்வதேச கிரிக்கெட்டில் 16 வருடங்களை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள் கிங்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்