டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள்...புதிய சாதனை படைத்த பட்லர்...!

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த 9-வது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் புரிந்துள்ளார்.;

Update: 2023-06-25 06:22 GMT

லண்டன்,

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த 9-வது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் புரிந்துள்ளார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற டெர்பிஷையர் பால்கன்ஸ், லங்காஷையர் அணிகளுக்கு இடையிலான டி20 லீக் போட்டியில் லங்காஷையர் அணிக்காக ஜாஸ் பட்லர் விளையாடினார். இதில் அவர் 36 பந்துகளில் 83 ரன்களைக் குவித்தார்.

இந்தப் போட்டியின்போது, ஜோஸ் பட்லர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் தற்போது 10,080 ரன்களை டி20 போட்டிகளில் குவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 9-வது வீரர் ஜோஸ் பட்லர் ஆவார்.

டி20 போட்டியில் 10,000 ரன்களை எடுத்த வீரர்கள்:-

1. கிறிஸ் கெய்ல் - 14,562

2. சோயிப் மாலிக் - 12,528

3. பொல்லார்ட் - 12,175

4. விராட் கோலி - 11,965

5. டேவிட் வார்னர்- 11,695

6. ஆரோன் பின்ச் - 11,392

7. அலெக்ஸ் ஹேல்ஸ் - 11,214

8. ரோகித் சர்மா - 11,035

9. ஜோஸ் பட்லர் - 10,080

Tags:    

மேலும் செய்திகள்