இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் ராசிபலன்

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

Update: 2024-01-05 02:23 GMT

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-20 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: நவமி இரவு 9.04 மணி வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: சித்திரை மாலை 5.42 மணி வரை. பிறகு சுவாதி.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமயிலை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஸ்ரீமயூரவல்லித் தாயாருக்கு மாலை வில்வத்தால் அர்ச்சனை.

ராசிபலன்

மேஷம்

புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்யும் நாள் தொழில் முன்னேற்றம் கருதி முயற்சி எடுப்பீர்கள், வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.

ரிஷபம்

ஆதாயம் தரும் செயலில் அக்கறை காட்டும் நாள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.

மிதுனம்

புகழ் கூடும் நாள். புதிய பொறுப்புகள் வந்துசேரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி உண்டு. பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.

கடகம்

அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் கிட்டும் நாள். தொழில் முயற்சி வெற்றி தரும். தொலைபேசி வழித்தகவல் தூரதேசப் பயணத்திற்கு உறுதுணைபுரியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

வளர்ச்சி கூடும் நாள்.வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. பொது வாழ்வில் புகழ் கூடும்.

கன்னி

மனக்குழப்பம் மாறி மகிழ்ச்சி ஏற்படும் நாள். வியாபார விரோதம் விலகும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

துலாம்

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேற்றம் காணும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்

சுபவிரயங்கள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். தொழில் ரீதியாகப் பயண மொன்றை மேற்கொள்வீர்கள்.

தனுசு

நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்து மகிழும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக விளங்குவர்.

மகரம்

தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கும்பம்

சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். துணிந்து எடுத்த முடிவில் வெற்றி கிட்டும். வியாபாரத்தை விரிவு செய்ய முன்வருவீர்கள். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுத்து உதவும்.

மீனம்

எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். வாகனப்பழுது செலவுகள் உருவாகலாம். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கவேண்டாம்.

Tags:    

மேலும் செய்திகள்