ஆறுமுகசுப்ரமணியசுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
காக்கையாடி ஆறுமுகசுப்ரமணியசுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.;
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே உள்ள, பழையனூர் ஊராட்சியில், காக்கையாடி ஆறுமுகசுப்ரமணியர் கோவில் உள்ளது. இக்கோவில் நேற்று ஆவணி மாத கிருத்திகை வழிபாடு நடைப்பெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி, வில்வபொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மூலமந்திர யாகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதைப்போல கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் உள்ள அபிமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவர் தனி சன்னதியில் நேற்று தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.