ஜேடர்பாளையம் அருகே பொன் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஜேடர்பாளையம் அருகே பொன் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா;

Update:2022-06-14 00:15 IST

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூரில் உள்ள பொன் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 10-ந் தேதி விநாயகர் வழிபாடும், பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

11-ந் தேதி புதிய விக்ரகங்களுக்கு கண் திறப்பும், யாக பூஜையும், நேற்று முன்தினம் 4-ம் கால யாக பூஜை, 5-ம் கால யாகபூஜை நடந்தது. விழாவில் நேற்று விநாயகர் வழிபாடு, புன்யாகம், பஞ்சகவ்யம், 6-ம் கால யாகபூஜை, தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் யாத்ரா தானம், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு பொன் காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வடகரையாத்தூர் பொன் காளியம்மன் குடிபாட்டுகாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்