கும்பகோணத்தில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் மாதத்தின் 27-வது நாள் இரவையொட்டி கும்பகோணத்தில், சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.;
கும்பகோணம்,
ரம்ஜான் மாதத்தின் 27-வது நாள் இரவையொட்டி கும்பகோணத்தில், சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.
புனித இரவு
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகிறார்கள்.ஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வரும் ரம்ஜான் நோன்பு காலத்தில் 27-வது நாள் இரவில் குரானின் முதல் வசனம் நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்டதால் புனித இரவாக (லைலத்துல் கதர் இரவு) கருதப்படுகிறது. மேலும் அந்த நாளில் சிறப்பு தொழுகைகளும் நடத்தப்படம்.
சிறப்பு தொழுகை
அந்த இந்த ஆண்டு ரம்ஜான் மாதத்தின் 27-ம் நாள் இரவு புனித இரவாக கருதி கும்பகோணம் பகுதியில் வசிக்கும் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கும்பகோணம் மேலக்காவேரி முகைதீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.