புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி கடம்பூர் கம்பத்ராயன்கிரி மலை பெருமாள் கோவிலில் வழிபாடு; 9 கி.மீ.தூரம் நடந்து சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி கம்பத்ராயன் கிரி மலை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. 9 கி.மீ.தூரம் நடந்து சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2022-10-09 05:31 IST

டி.என்.பாளையம்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி கம்பத்ராயன் கிரி மலை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. 9 கி.மீ.தூரம் நடந்து சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவில்

கடம்பூரை அடுத்த அத்தியூர் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ளது கம்பத்ராயன் கிரி. இங்கு பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இதற்கு கடம்பூர் மலைக்கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும் சென்று வழிபாடு நடத்துவார்கள். அத்தியூர் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள அட்டணை வரை வாகனங்களில் செல்வார்கள்.

9 கி.மீ.தூரம்

அதன்பின்னர் அங்கிருந்து சுமார் 9 கி.மீ. தூரம் உள்ள கம்பத்ராயன் கிரி பெருமாள் கோவிலுக்கு நடந்து தான் செல்ல வேண்டும்.

நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி கடம்பூர் மலைக்கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கம்பத்ராயன் பெருமாள் கோவிலுக்கு காலையில் சென்றனர். பின்னர் சிறப்பு பூஜை செய்து தீபம் ஏற்றி வழிபட்டனர். அதன்பின்னர் மாலையில் போலீஸ் பாதுகாப்புடன் வீடு திரும்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்