பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் எழுந்துள்ளது, அஷ்டலட்சுமி கோவில். செல்வத்துக்கும் செழிப்புக்கும் வழிகாட்டும் கடவுளாக பூஜிக்கப்படும் லட்சுமி தேவியின், எட்டு அவதார கோலங்களை இக்கோவிலில் தரிசிக்கலாம்.;

Update:2023-10-20 17:23 IST

விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் அஷ்டலட்சுமியின் அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும். கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்தக் கோவில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தான்ய லட்சுமி ஆகியோர் அருள்புரிகின்றனர். ஆனால் இரண்டாவது தொகுதியில் உள்ள மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவை வணங்கிய பின்னரே, மற்ற தெய்வ வடிவங்களை வணங்கவேண்டும் என்ற ஐதீகம் பின்பற்றப்படுகிறது. எனவே மூன்றாவது தளத்தில் உள்ள சந்தானலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமியையும், நான்காவது தளத்தில் தனலட்சுமியையும் வழிபட்ட பின்னர் முதல் தளத்தில் உள்ள லட்சுமிகளை வழிபடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்