காயத்ரி மந்திர மகிமை

கீதையில் பகவான் கிருஷ்ணர், “நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் காயத்ரி மந்திரத்திற்கு இருக்கும் சிறப்பை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

Update: 2020-02-04 01:30 GMT
விவேகானந்தரின் குருவாக விளங்கிய ராம கிருஷ்ண பரமஹம்சர், “பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜெபிப்பது மிகப்பெரிய பலனைத் தரும். அது மிகச்சிறிய மந்திரம்தான். ஆனால் மிகமிக அதிக சக்தி வாய்ந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

வேதத்தில் இருந்து வந்த, அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் ‘காயத்ரி மந்திரம்.’இந்த மந்திரமானது, விஸ்வாமித்திரர் மகரிஷியால் கண்டறியப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இந்த மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்தும் திறன் கொண்டது. வேதங்களின் தாய்தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இந்த தேவி இருப்பாள். காயத்ரி, ஐம்புலன்களின் அதிபதி.

காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடு சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். இதனை பேதமின்றி அனைவரும் சொல்லி வந்தால், இதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், மனக் கவலைகள் நீங்கும். குறிப்பாக மாணவர்களின் கல்வியின் மேம்மை உண்டாகும்.

காயத்ரி மந்திரம் ஜெபிப்பதன் பலன்கள்:-

* கம்பீரத் தோற்றம்

* தரமான பேச்சு

* வறுமை, குறை நீங்குதல்

* பாதுகாப்பு வட்டம்

* கண்ணில் அறிவு தெரிதல்

* அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.

* நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.

* மனதில் அமைதி குடிகொள்ளும்.

* நற்செயல்களில் ஈடுபடுவர்

* வாழ்க்கையில் வரும் தடைகளை நீக்கும்

* மூளையை பிரகாசிக்கச் செய்யும்

* உள்ளுணர்வினை தெளிவாக்கும்

மேலும் செய்திகள்