வார விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Update: 2024-10-20 09:27 GMT

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நிலையில், வார விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாகவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்