உளவு பிரிவு அதிகாரியை கடித்து வைத்த அமெரிக்க அதிபரின் செல்ல நாய்; ஓராண்டில் 11-வது சம்பவம்

அமெரிக்க அதிபர் பைடனின் 2 வயது செல்ல நாய் அந்நாட்டு உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்து உள்ளது.

Update: 2023-09-28 07:37 GMT

நியூயார்க்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு வளர்ப்பு பிராணிகளை தன்னுடன் வைத்திருக்கிறார். அவற்றில், மேஜர், கமாண்டர் என பெயரிடப்பட்ட செல்ல நாய்களும் அடங்கும். இவற்றில், அதிபராக பைடன் பதவியேற்றதும் அவருடைய செல்ல நாய் மேஜர், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

அது அப்போது வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவரை கடித்து விட்டது என கூறப்பட்டது. ஆனால், அதுபற்றிய கூடுதல் விவரங்கள் எதனை பற்றியும் உளவு பிரிவு அதிகாரிகளோ அல்லது வெள்ளை மாளிகையோ வெளியிடவில்லை.

இந்நிலையில், பைடன் வளர்த்து வரும் கமாண்டர் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த 2 வயது செல்ல நாய் உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதில், 10 முறை அதிகாரிகளை கடித்து வைத்து அல்லது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இதுபோன்றதொரு, சம்பவத்தில் காவல் அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

இந்த நிலையில், 11-வது சம்பவம் நடந்து உள்ளது. அந்த அதிகாரிக்கு வெள்ளை மாளிகை வளாக பகுதியிலேயே வைத்து, மருத்துவ அதிகாரிகள் சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பின் அவர் நன்றாக உள்ளார் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்