இஸ்ரேல் படைகள் மீது முதல் முறையாக லெபனான் ராணுவம் துப்பாக்கி சூடு

இஸ்ரேல் படைகள் மீது முதல் முறையாக லெபனான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

Update: 2024-10-03 16:12 GMT

Image Courtesy : AFP

பெய்ரூட்,

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைய உள்ள சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து லெபனானின் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த போரில் இதுவரை இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில், முதல் முறையாக இஸ்ரேல் படைகள் மீது லெபனான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்