ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2023-11-04 20:58 GMT

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.25 மணிக்கு பைசாபாத் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி 3 வாரமாக நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்