டோங்கா தீவுகளில் திடீர் நிலநடுக்கம்

டோங்கா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2024-08-17 07:23 GMT

நுலுலபா,

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

இந்நிலையில், டோங்கா தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8:59 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டோங்கா தீவுகளில் 155.2 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் ரிக்டர் அளவில் 6.0 ஆக நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்