உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு

உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

Update: 2023-01-05 16:26 GMT

Photo Credit: AFP

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ரஷ்யா தொடுத்த இந்த போர ஓரு ஆண்டை நெருங்கி செல்கிறது. எனினும், போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தற்போது வரை தெரியவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு கொடுப்பதால் ரஷியாவுக்கு எதிராக போரில் வலுவாக சண்டையிட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளிலும் கொண்டாடப்படும் ஆர்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக போர் நிறுத்தம் தற்காலிகமாக 2 நாட்கள் அமல்படுத்தப்படுவதாக புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய பிறகு ரஷியா சண்டை நிறுத்தம் செய்ய இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்