துருக்கியில் போதைப்பொருள் கடத்திய 400 பேர் கைது
போதைப்பொருள் கடத்தலை தடுக்க துருக்கி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அங்காரா,
மத்திய ஆசிய நாடான துருக்கி போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக உள்ளது. இதனால் அங்கு சட்ட விரோத செயல்களும் அதிகளவில் அரங்கேறுகின்றன. எனவே போதைப்பொருள் கடத்தலை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய 400 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 2 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.