அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆலோசகராக இந்திய வம்சாவளி நீரா டாண்டன் நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆலோசகராக இந்திய வம்சாவளி நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-05-06 16:51 GMT

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தான் பதவியேற்ற நாள் முதலே தன்னுடைய நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் ஜனாதிபதி ஜோ பைடனின் அரசில் இந்தியர்கள் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கைக்கான ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்ட வல்லுநரான நீரா டாண்டன் தற்போது ஜோ பைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். அதோடு கூடுதலாக உள்நாட்டு கொள்கைக்கான ஆலோசகர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகையின் மிக முக்கிய 3 பதவிகளை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி மற்றும் ஆசிய வம்சாவளி என்கிற பெருமையை நீரா டாண்டன் பெறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதிகளான கிளிண்டன் மற்றும் ஒபாமாவின் நிர்வாகங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் நீரா டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்