கருத்தரிப்பதை தள்ளிப்போடும் பெண்கள்.. தென் கொரியாவில் கருவுறுதல் விகிதம் மேலும் சரிவு

மொத்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.

Update: 2024-02-29 10:58 GMT

தென் கொரியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சி முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உள்ள நாடுகளில், கருவுறுதல் விகிதம் 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ள ஒரே நாடு தென் கொரியா ஆகும்.

உலகிலேயே மிக குறைந்த கருவுறுதல் விகிதம் கொண்ட தென் கொரியாவில் கடந்த ஆண்டு மேலும் சரிந்துள்ளது.

மொத்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. தென் கொரிய பெண்ணின் வாழ்க்கையில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 2022-ல் 0.78 ஆக இருந்தது. 2023-ல் 0.72 ஆக குறைந்துள்ளது என்று கொரிய புள்ளியல் தரவுகள் தெரிவிக்கின்றன.

மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்த போக்கை மாற்றியமைக்க அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. எனினும், பெண்கள் தங்கள் தொழில் முன்னேற்றம், வருமானம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் குறித்து அதிகம் கவலைப்படுவதால் கருத்தரிப்பதை தள்ளிப்போடுகின்றனர், அல்லது குழந்தைகளைப் பெறாமல் இருக்க முடிவு செய்கின்றனர். இதன் காரணமாக மொத்த கருவுறுதல் விகிதம் தொடர்ந்து சரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்