திபெத்தில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

திபெத்தில் ரிக்டர் 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-01-14 07:01 IST

பீஜிங்,

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், திபெத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 6.30 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.39 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.39 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக நேற்று முந்தினம் திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 126க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 300கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாநில செய்தி நிறுவுனம். சின்ஹுவர தெரிவித்துள்ளது. பேரழிவில் இருந்து 30.000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்