இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உரையாடல் 2019-க்கு பிறகு கடினமாகிவிட்டது - பாகிஸ்தான்
இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உரையாடல், 2019-ம் ஆண்டிற்கு பிறகு கடினமாகிவிட்டது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளது.;
இஸ்லாமாபாத்,
இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உரையாடல் 2019-ம் ஆண்டிற்கு பிறகு கடினமாகிவிட்டது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளது.
தாஷ்கண்ட் நாட்டில் நடைபெறும் எஸ்சிஓ அமைப்பின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிலாவல் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், "இந்தியா எங்கள் அண்டை நாடு. பல விஷயங்களை ஒருவர் முடிவு செய்ய முடியும் என்றாலும், அண்டை வீட்டாரை தேர்வு செய்ய முடியாது, எனவே அவர்களுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
மேலும், கடந்த 2019- ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உரையாடல் கடினமாகிவிட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெறுவதாகவும் அதே ஆண்டில் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் இந்தியா அறிவித்தது.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பாகிஸ்தான் மற்றும் இந்திய பிரதமர்களுக்கு இடையே எந்த சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என அவர் தெரிவித்தார்.