பிரதமர் மோடி வருகையையொட்டி புர்ஜ் கலீபா கோபுரத்தில் ஒளிர்ந்த இந்திய தேசியக் கொடி
சர்வதேச மாநாட்டில் கவுரவ விருந்தினராக இந்தியா கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று துபாய் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார்.;
துபாய்,
பிரதமர் மோடி வருகையையொட்டி துபாயில் உள்ள உலகின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் இந்தியாவின் தேசியக்கொடி இரவு ஒளிரவிடப்பட்டது. 'கெஸ்ட் ஆப் ஹானர் - ரிபப்ளிக் ஆப் இந்தியா' என்ற எழுத்துக்களால் ஓளிரவிடப்பட்டது. இதை அங்குள்ள இந்தியர்கள் மற்றும் ஏராளமானோர் பார்த்து பரவசமடைந்தனர்.
இது குறித்த புகைப்படங்களை துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டுக்கு கவுரவ விருந்தினராக வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறோம். இரு நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான உறவுகள் சர்வதேச ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த சர்வதேச மாநாட்டில் கவுரவ விருந்தினராக இந்தியா கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.